இந்தியா

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்

DIN

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பின் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்திய சோதனையில் 106 பேரும், நேற்று நடத்திய சோதனையில் 250 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிஎஃப்ஐ அமைப்பின் இணையதளத்தை முதல்கட்டமாக மத்திய அரசு முடக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT