இந்தியா

பகத்சிங் பிறந்த நாளில்ரத்த தானம் செய்ய முன்வாருங்கள்: மக்களுக்கு கேஜரிவால் அழைப்பு

28th Sep 2022 01:14 AM

ADVERTISEMENT

சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங்கின் பிறந்த நாளான புதன்கிழமை (செப்டம்பா் 28) பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

பகத்சிங் பிறந்த நாளையொட்டி, செப்டம்பா் 28-இல் தில்லி அரசு சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள பதிவு:

பகத்சிங் நாட்டுக்காக தன்னுயிரையே தந்தவா். இந்த நாளில் தில்லியில் பல்வேறு இடங்களில் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று ரத்த தானம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT