இந்தியா

வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும் ஜெயிலுக்குப் போகலாம்!

DIN

டேஹ்ராடூன்: ஒரே ஒரு நாள் எங்காவது சென்று நிம்மதியாக தங்கியிருந்து நாளைக் கழிக்க வேண்டும். ஆனால் செலவும் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்று கருதினால்..

ஜாதகத்தில் கட்டம் சரியில்லை. ஜெயிலுக்குப் போக வேண்டியது வரலாம் என்று ஜோதிடர் சொல்லிவிட்டரா?

எத்தனையோ இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டோம். இந்த சிறைக்கூடம் எப்படித்தான் இருக்கும் என்பதை பார்க்கவில்லையே? அதற்காக கொலையா செய்ய முடியும்? என்று ஏங்குகிறீர்களா?

உங்கள் ஏக்கம், துக்கம், அச்சம் எல்லாவற்றையும் போக்குவதற்கு ஒரு யோசனை இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறைச்சாலையின் நிர்வாகம் இந்த உலகிலேயே இல்லாத ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ரூ.500 செலுத்தினால், ஒரு பகல் மற்றும் ஒரு இரவு சிறைச்சாலையில் கைதிகள் போல தங்கியிருக்கலாம் என்பதே அந்த சலுகை(?) ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றால் கலக்கமடைந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த உபாயமாக இருக்கலாம்.

ஹல்த்வானி சிறைச்சாலை 1903ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிறகு இந்த சிறைச்சாலை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பாதி கட்டடங்கள் வேறு அலுவல்களுக்கு மாற்றப்பட்டது. மற்ற கட்டடம் அப்படியே விடப்பட்டிருந்தது.

இதனை தற்போது கட்டமைத்து, சிறைக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கத் தயராகி வருகிறது என்கிறார் சிறைத் துறை அதிகாரி.

இதற்கு முன்பும், இதுபோல மூத்த அதிகாரிகள், சிலரை இவ்வாறு சிறைக்கூடத்துக்குள் அனுமதிக்க ஒப்புக் கொள்வார்கள். அவர்களக்கு உணவு, சிறைக் கைதிகளுக்கான ஆடைகள் கூட வழங்கப்படும். அங்கிருக்கும் உணவுக்கூடத்திலேயே உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

இதையடுத்தே இதனை சிறைக்கூடமாக மாற்றி விருந்தினர்களை வரவேற்கும் திட்டம் உதித்தது. முதலில் ஜோதிட ரீதியில் பாதிக்கப்படுபவர்களுக்காகவே இதனை திட்டமிட்டோம்.

இதனை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அரசுக்கு வருமானமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT