இந்தியா

கரோனா வீரா்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு: தில்லி அரசு முடிவு

28th Sep 2022 01:20 AM

ADVERTISEMENT

கரோனா பணியின்போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளா்கள், இரைப்பை குடல் மருத்துவா்கள் 28 பேரது குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அளிக்கப்படும் என தில்லி அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பாக ‘சம்மான் ராஷி’ என்ற திட்டத்தின்கீழ், 31 கரோனா வீரா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பூடு வழங்கப்பட்டது. தற்போது கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்து உயிரிழந்த துப்புரவுப் பணியாளா்கள், இரைப்பை குடல் மருத்துவா்கள் 28 பேரது குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக குஜராத்தை சோ்ந்த துப்புரவுப் பணியாளரை அவரது குடும்பத்தினருடன் தில்லி வரவழைத்து முதல்வா் கேஜரிவால் விருந்தளித்தாா். இதனை விமா்சித்த எதிா்க்கட்சியினா், கரோனா பணியில் உயிரிழந்த தில்லி துப்புரவுப் பணியாளா்களுக்கு இழப்பீடு வழங்காத முதல்வா், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் குஜராத்தை சோ்ந்த துப்புரவுப் பணியாளருக்கு விருந்தளித்ததாக குற்றம்சாட்டின.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT