இந்தியா

இலவச ரேஷன் திட்டம்: அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

DIN

புதுதில்லி: ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏய்) திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு (புதன்கிழமை) நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

வரும் டிசம்பர் 2022 வரை உள்ள மூன்று மாதங்களுக்கு 80 கோடிக்கு நபர்களுக்கு  இலவச ரேஷன் வழங்க ரூ.44,700 கோடி செலவாகும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

கரோனா நெருக்கடி 2021-22ல் தொடரும் நிலையில், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தை மே மற்றும் ஜூன் 2021 என இரண்டு மாத காலத்திற்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு இந்த திட்டத்தை மீண்டும் ஜூலை முதல் நவம்பர் வரையான ஐந்து மாதங்களுக்கு நீட்டித்தது அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்தத் திட்டம் மீண்டும் டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டது. 80,000 கோடி செலவில் ஏழைகளுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கும் திட்டத்தை 6 மாதங்களுக்கு செப்டம்பர் 30, 2022 வரை நீட்டித்தது. இதுவரை (பிஎம்ஜிகேஏய்)-வின் மொத்தச் செலவு கிட்டத்தட்ட ரூ.3.40 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

இலவச தானியங்கள் NFSA இன் கீழ் வழங்கப்படும் சாதாரண ஒதுக்கீட்டை விட அதிகமாகவும், அதிக மானிய விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ. 2-3 விலையிலும் வழங்கப்படுகின்றன. (பிஎம்ஜிகேஏய்) கீழ் 1,000 லட்சம் டன்களுக்கு மேல் இலவச உணவு தானியங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எந்த தேசத்து அழகியோ..!

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT