இந்தியா

தலித் மாணவரை அடித்துக் கொன்ற ஆசிரியர்! 283 பேர் மீது வழக்கு

28th Sep 2022 07:53 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவரை ஆசிரியர் அடித்துக்கொன்ற விவகாரத்தில் இறந்த மாணவனின் தந்தை உள்பட 283 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் ஒளரையாவில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தவா் நிகில் குமாா். தலித் மாணவரான இவா், பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட சமூக அறிவியல் தோ்வில் (டெஸ்ட்) சில தவறுகள் செய்துள்ளாா். இதனால் அவரின் சமூக அறிவியல் ஆசிரியா் அஸ்வினி சிங், நிகில் குமாரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. 

படிக்கவெள்ளம்! ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் மக்கள்!

கடந்த 7-ஆம் தேதி இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிகில் குமாா், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாா். எனினும் அவா் உடல்நிலையில் முன்னேற்றமின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

நிகில் குமாா் படித்த பள்ளி முன்பாக உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்தைக் கண்டித்து உள்ளூர் மக்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர 283 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

படிக்கபாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைப்பு: அப்துல் சத்தார்

உயிரிழந்த மாணவனின் தந்தை மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நீதி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததால், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT