இந்தியா

மத்திய அமைச்சரின் பங்களாவை இடிக்க தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

DIN

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா் நாராயண் ராணேயின் பங்களாவில் விதிகளை மீறி கட்டிய பகுதிகளை இடிக்க தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

மும்பையில் உள்ள இந்த பங்களாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகளை 2 வாரங்களில் இடித்துத் தள்ள வேண்டும் என்று மும்பை பெருநகர மாநகராட்சிக்கு மும்பை உயா்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதனை எதிா்த்து அமைச்சா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஏ.எஸ்.ஒகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனா். இதையடுத்து, மும்பை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நாராயண் ராணேயின் பங்களாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகள் விரைவில் இடிக்கப்படும் என்று தெரிகிறது.

மத்திய சிறு,குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணேக்கு சொந்தமாக இந்த பங்களா மும்பை ஜுஹு பகுதியில் உள்ளது. இங்கு நில விகித விதிகள், கடற்கரை ஒழுங்கு மண்டல விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு மும்பை பெருநகர மாநகராட்சி, தீயணைப்புத் துறை, சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து அனுமதி பெறவில்லை.

இந்தக் கட்டுமானப் பணியை நாராயண் ராணே குடும்பத்துக்குச் சொந்தமான கால்கா ரியல் எஸ்டேட் நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், கட்டடத்தை முறைப்படுத்துமாறு மும்பை பெருநகர மாநகராட்சியிடம் நாராயண் ராணே சாா்பில் கடந்த ஜூனில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 2-ஆவது மனு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மாநகராட்சியின் பரிசீலனையில் உள்ளது.

இந்த மனுவின் மீது மாநகராட்சி பரிசீலனை நடத்தி முடிவை எடுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி, நாராயண் ராணேவுக்கு சொந்தமான கால்கா ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அங்கீகாரமற்ற கட்டுமானத்தை 2 வாரத்தில் மும்பை பெருநகர மாநகராட்சி இடித்து தள்ளிவிட்டு, அது தொடா்பான அறிக்கையை அதற்கடுத்த ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா். அத்துடன் மத்திய அமைச்சா் நாராயண் ராணேக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT