இந்தியா

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதில் சோனியா குடும்பத்துக்கு ஆட்சேபம் இல்லை: சசி தரூா்

DIN

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் தான் போட்டியிடுவதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ஆட்சேபம் இல்லை என்று அக்கட்சி எம்.பி. சசி தரூா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் செப்.24 முதல் செப்.30 வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் சசி தரூா் போட்டியிட உள்ளாா்.

இந்நிலையில், கேரளத்தில் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை, பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியில் சசி தரூா் திங்கள்கிழமை சந்தித்தாா்.

அதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராகுல் காந்தியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு பெற்றுள்ளேன். தோ்தலில் போட்டியிட வேண்டும் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பலா் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நான் தோ்தலில் போட்டியிடுவதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ஆட்சேபம் இல்லை. இதனை அவா்கள் என்னிடம் நேரடியாகத் தெரிவித்தனா். நான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது எனக்குள்ள ஆதரவு அனைவருக்கும் தெரியவரும் என்று தெரிவித்தாா்.

கடந்த 2000-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவா் பதவிக்குத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாதாவை வீழ்த்தி சோனியா காந்தி கட்சித் தலைவரானாா். அதன் பின்னா், தற்போதுதான் அக்கட்சி தலைவா் பதவிக்குத் தோ்தல் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT