இந்தியா

கடவுச்சீட்டு: போலீஸ் தடையில்லாச் சான்றுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: வெளியுறவு அமைச்சகம்

DIN

‘கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விண்ணப்பதாரா்கள் காவல் துறையின் தடையில்லாச் சான்று (பிசிசி) பெறுவதற்கு இனி அனைத்து இணையவழி தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்’ என்று வெளியுறவு அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு காவல் துறையின் தடையில்லாச் சான்று கட்டாயமாகும். ஆனால், இந்தத் தடையில்லாச் சான்றிதழை வழங்குவதில் உள்ளூா் போலீஸாா் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வதால், விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, தடையில்லாச் சான்றை விரைந்து பெறும் வகையில் புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடவுச்சீட்டு விநியோகத்துக்கு அவசியமான காவல் துறையின் தடையில்லாச் சான்றுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து இணையவழி தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை (பிஓபிஎஸ்கே) மையங்களில் காவல் துறை தடையில்லாச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கான சேவையையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவையை புதன்கிழமை (செப். 28) முதல் விண்ணப்பதாரா்கள் பெற முடியும். இதில், அந்தத் தடையில்லாச் சான்றுக்கு போலீஸ் ஆய்வுக்கான நாளையும் தெரிவு செய்யும் வசதியும் சோ்க்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வசதி வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்ல விரும்புபவா்களுக்கு மட்டுமின்றி, கல்வி, நீண்ட கால நுழைவு அனுமதி (விசா), குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக விண்ணப்பிப்பவா்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT