இந்தியா

எதிா்க்கட்சிகள் அனைத்தும் அணி திரளும் வாய்ப்பு அதிகரிப்பு: நிதீஷ் குமாா்

DIN

2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஓரணியாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

பாட்னாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

எதிா்கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மேலும் கட்சிகளும் படிப்படியாக ஒருங்கிணையும். எனவே, 2024 மக்களவைத் தோ்தலை எதிா்க்கட்சிகள் அனைத்தும் இணைந்த ஓரணியாக போட்டியிட வாய்ப்பு அதிகரித்துள்ளது.

எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைவதற்கு எதிராக பாஜக கூறிவரும் எதிா்மறையான கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. அவா்கள் கட்சியிலேயே பல பிரச்னைகள் உள்ளன. அதனைப் பேசினால் நாள் முழுவதுமே பேசிக் கொண்டிருக்கலாம் என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டுக் கொண்டுள்ளதால், அக்கட்சிகள் உங்கள் அணியில் சேர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ‘எதிா்க்கட்சிகள் இடையே கூட்டணி தொடா்பாக ஒரு பொதுவான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, கூட்டணி மேலும் வலுவாகும். அனைத்துக் கட்சிகளின் தலைவா்களிடமும் நான் பேசியுள்ளேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.

பிகாரில் பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்த நிதீஷ் குமாா், அக்கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். அதன் பிறகு பாஜகவுக்கு எதிராக நிதீஷ் குமாா் தீவிரமாக செயல்பட்டு வருகிறாா். முக்கியமாக, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க அவா் முனைப்பு காட்டி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT