இந்தியா

தலித் மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்: உ.பி.யில் அதிர்ச்சி!

27th Sep 2022 03:06 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் மாணவன் ஒருவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவுரியா மாவட்டத்தின், பாபோண்ட் சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் தலித் மாணவர் நிகில் குமார் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த வகுப்பின் சமூக அறிவியல் ஆசிரியர் அஸ்வின் சிங் செப்.7ஆம் தேதி சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் மாணவன் தவறாக எழுதியிருந்ததால், அவனை சரமாரியாக அடித்துள்ளார்.

ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியதில் பலத்த காயமடைந்த தலித் மாணவன் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ADVERTISEMENT

படிக்க: 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம்?

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவர், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். 

மாணவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ஆசிரியரை விசாரித்து வருகின்றனர். 

ஆசிரியரைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT