இந்தியா

நேரலையில் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை

27th Sep 2022 11:54 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் வழக்கு விசாரணை இன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

உச்சநீதிமன்றத்தின் வழக்குகள் விசாரணை அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில், முதற்கட்டமாக சோதனை முறையில் மூன்று மாதங்களுக்கு தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் இன்றுமுதல் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் ‘டார்ட்’: இனி பூமியை நெருங்க முடியாது!

ADVERTISEMENT

அதன்படி, முதல் வழக்காக பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவிகிதம் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, தில்லி அரசு - மத்திய அரசுக்கு இடையேயான அதிகாரம், மகாராஷ்டிர அரசியல் தொடர்பான வழக்குகளும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT