இந்தியா

2 நாள் பயணமாக குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி!

27th Sep 2022 03:45 PM

ADVERTISEMENT

 

குஜராத்தில் செப்டம்பர் 29ல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.  

சூரத், பாவ்நகர், அகமதாபாத் மற்றும் அம்பாஜி ஆகிய இடங்களில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். 

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிறகு, கலுபூர் நிலையத்திலிருந்து தூர்தர்ஷன் கேந்திரா நிலையத்திற்கு மெட்ரோ பயணத்தை மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT

படிக்க: அசாமில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கைது!

உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கு பாவ்நகரில் அடிக்கல் நாட்டுவதுடன், 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளையும் அவர் திறந்து வைப்பார். குஜராத்தில் முதன்முறையாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மேலும், சூரத்தில் வைர வர்த்தக வணிகத்தின் விரைவான வளர்ச்சியை நிறைவு செய்யும் நோக்கில் ட்ரீம் சிட்டியின் முதல் கட்டத்தைத் துவக்குவதும் அடங்கும். 

அம்பாஜி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக அகல ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டுவார்.பின்னர், அம்பாஜி கோயிலுக்குச் சென்று, கப்பர் தீர்த்தத்தில் நடக்கும் மகா ஆரத்தியிலும் அவர் கலந்துகொள்கிறார். 

அகமதாபாத்தில் நடைபெறும் நவராத்திரி விழாக் கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT