இந்தியா

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சதமடிப்பதைத் தடுக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

DIN

புதுதில்லி: ரூபாயின் மதிப்பு சதம் அடிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடிக்கு வைக்கும் ஒரே கோரிக்கை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இன்றைய ஆரம்பகட்ட வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 37 பைசா அதிகரித்து ரூ.81.30-ஆக இருந்தது.

தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், வரலாற்றில் முதல்முறையாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82-யை நோக்கிச் செல்கிறது என்றார்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, செப்டம்பர் 2021-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73-ஆக இருந்தது. அது இப்போது 81.63-ஆக அதிகரித்துள்ளது.

முதல்முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்றபோது, ​​ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.62 ஆக இருந்த நிலையில், அவரது ஆட்சிக் காலத்தில் ரூபாயின் மதிப்பு 41.5 சதவிகிதம் சரிந்துவிட்டது என்றார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், 2021 செப்டம்பரில் 642 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது 545.65 பில்லியன் டாலராக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 571 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது தற்போது 545 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.

மோடி அரசின் தவறான கொள்கைகளால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை சந்தையில் ஆட்டம் கண்டுள்ளது. அதனால்தான் வெளிநாட்டு நிதிகள் இந்தியாவை விட்டு வெளியேறியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

2013-ஆம் ஆண்டிலும் ரூபாய் மதிப்பு சரிந்தது என்று மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டப்பட்டது. ஆம், அது சரிதான். ஆனால், உண்மை என்னவென்றால் 2013-ல் சர்வதேச காரணங்கள் பல அச்சுறுத்தியது. இதனிடையில், டேப்பர் டான்ட்ரம் ரூபாயை பலவீனமாக்கியது, பின்னர் வந்த காங்கிரஸ் அரசு ரூபாயை பலப்படுத்தியது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் சேர்ந்து ரூபாயின் நகர்வை கவனித்து வந்தனர். இதனால் 35 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நிதிகள் இந்தியாவிற்குள் திரும்பிப் பெறப்பட்டன என்றார் சுப்ரியா ஷ்ரினேட்.

இந்நிலையில், ரூபாய் மதிப்பு சதம் அடிப்பதை தடுக்க வேண்டும் என்பதுதான் மோடிஜியிடம் நாங்கள் வைக்கும் ஒரே வேண்டுகோள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT