இந்தியா

உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: ஒருவர் பலி, 6 பேர் காயம்! 

27th Sep 2022 01:58 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். 

தேசிய நெடுஞ்சாலை-9 இல் உள்ள ராஜப்பூரில் தில்லி நோக்கிச் சென்ற பேருந்து, நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது பின்னாலிருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒருவர் பலியாகினர், மேலும் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கஜ்ரௌலாவில் உள்ள சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராஜப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT