இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்: ஜெய்ஷ் தீவிரவாதி சுட்டுக் கொலை

27th Sep 2022 11:14 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கொல்லப்பட்டதாக போலீசார்ர் தெரிவித்தனர்.

குல்காம் மாவட்டத்தின் பட்போரா கிராமத்தில் நடந்த என்கவுண்டரில் இரண்டு பொதுமக்கள் மற்றும் ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பட்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்குச் சுற்றிவளைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது, அதற்கு அவர்கள் பதிலடி கொடுத்தனர்.

படிக்க: 2023-ல் இந்தியாவில் 10.4% ஊதியம் உயர வாய்ப்பு!

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. 

மேலும், காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகச் செய்தித் தொடர்பாளர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT