இந்தியா

உலக பணக்காரர்கள் பட்டியல்: 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் அதானி!

27th Sep 2022 04:35 PM

ADVERTISEMENT

உலக பணக்காரர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ்  கௌதம் அதானியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

படிக்க | எரிசக்தி ஏற்றுமதி மையமாக இந்தியா மாறும்: அதானி

சமீபத்தில் போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ.24000 கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (ரூ.12700கோடி) 3-வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ்  (ரூ. 13700 கோடி)  4-வது இடத்திலும் உள்ளதாக அறிவித்தது. 

ADVERTISEMENT

தற்போது, ப்ளும்பெர்க் பில்லியனர் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி 135 பில்லியன் (ரூ. 13,500 கோடி) கௌதம் அதானி மீண்டும் 3வது இடத்திற்கு கீழறங்கி உள்ளார். ஜெஃப் ஃபேசோஸ் 138 பில்லியனுடன் (ரூ. 13,800 கோடி) இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். வழக்கம்போல எலான் மஸ்க் 245 பில்லியன் (ரூ. 2,4500 கோடி) முதலிடத்தில் நீடிக்கிறார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT