இந்தியா

‘ஆதார் இருந்தால்தான் உணவு‘: திருமணத்தில் கட்டுப்பாடு; கடுப்பான உறவினர்கள்

27th Sep 2022 04:32 PM

ADVERTISEMENT

திருமண நிகழ்வில் ஆதார் அட்டை கொண்டு வந்தவர்களுக்கு மட்டும் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் திருமண நிகழ்வில் போட்டோ ஷூட், உணவு, அலங்காரம் என அனைத்து ஏற்பாடுகளிலும் புதுமையைகாட்டி உறவினர்களின் கவனத்தை மணமக்கள் வீட்டார் ஈர்த்து வரும் சூழலில், வித்தியாசமான அணுகுமுறையால், நாட்டு மக்களின் கவனத்தை ஒரு திருமணம் ஈர்த்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் உணவு அரங்கிற்குள் ஆதார் அட்டை காட்டும் விருந்தினர்களை மட்டுமே பெண்வீட்டார் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு வழங்கப்படாததால், பலரும் எரிச்சலுடன் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து பெண்வீட்டார் தரப்பில் கூறுகையில், அந்த மண்டபத்தில் சகோதரிகள் இரண்டு பேருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஆதார் உள்ளவர்களை மட்டும் அனுமதித்ததாக தெரிவித்தனர்.

மேலும், இந்த திருமணத்தில் நடந்த சம்பவத்தை விடியோ எடுத்த சில விருந்தினர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT