இந்தியா

பெண்கள் கருவுறுதல் 10 ஆண்டுகளில் 20% குறைந்தது! மக்கள்தொகை குறைந்துவிடுமா?

27th Sep 2022 12:26 PM

ADVERTISEMENT


புது தில்லி: கருவுறுதல் சராசரி கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவீதம் அளவுக்குக் குறைட்நதிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது 15 வயது முதல் 49 வயது வரையிலான 1000 பெண்களில், ஒரு ஆண்டுக்கு குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் 20 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கிறதாம்.

ஜிஎஃப்ஆர் என்பது பெண்கள் கருவுறுதல் சராசரி விகிதம். அதாவது, 2008-2010 என மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் கருவுறுதல் சராசரி 86.1 சதவீதமாக இருந்தது. இதுவே 2018 - 20ஆம் ஆண்டுகளில் 68.7 ஆகக் குறைந்துள்ளது. 

இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்

ADVERTISEMENT

மாதிரி பதிவு முறை (எஸ்ஆர்எஸ்) வெளியிட்ட இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில், நகரப் பகுதிகளில் 20.2 சதவீதமும், கிராமப் பகுதிகளில் 15.6 சதவீதமும் பெண்கள் கருவுறுதல் விகிதம் குறைந்திருப்பது உறுதியாகிறது.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், பெண்கள் கருவுறுதல் விகிதம் குறைகிறது என்பது, மக்கள் தொகைப் பெருக்கத்தில் ஏற்படும் குறைவைக் காட்டுகிறது. இது உண்மையில் ஒரு நல்ல அறிகுறிதான் என்கிறார். பெண்களின் திருமண வயது உயர்ந்தது, பெண் கல்வி, கருவுறுதலைத் தவிர்ப்பதற்கான கருவிகள் எளிதாகக் கிடைப்பது போன்றவை, இதற்கு முக்கிய காரணிகள் என்றும் கருதப்படுகிறது.

இது மட்டுமல்ல, அதிகம் படித்த பெண்கள் இருக்கும் மாநிலங்கள், இந்தப் பட்டியலில் முதன்மை இடத்தை வகிக்கின்றன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT