இந்தியா

நாட்டில் 118 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

27th Sep 2022 12:30 PM

ADVERTISEMENT

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 3,230 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது கடந்த 118 நாட்களில் பதிவான மிகக்குறைவான தினசரி கரோனா பாதிப்பாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,230 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,45,75,473 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 42,358 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 32 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,562 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,40,04,533 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதையும் படிக்க: பறவை மீது விமானம் மோதல்: 135 பயணிகள் உயிர் தப்பினர்!

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 217.82 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT