இந்தியா

அளவில்லா மகிழ்ச்சி: 57 ஆண்டுகளுக்குப் பின்.. முதல் முறையாகக் கிடைத்த சிலிண்டர்

ENS


குவகாத்தி: நாட்டில் முதல் இண்டேன் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடங்கி சுமார் 57 ஆண்டுகளுக்குப் பின் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் விஜயநகர் என்ற கிராமத்துக்கு தற்போதுதான் முதல் முறையாக எரிவாயு உருளை விநியோகம் நடைபெற்றுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் விஜயநகரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தை அடைய 157 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணிக்க வேண்டும்.

இப்பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்புதான்  சங்லாங் மாவட்டம் மியோ துணை மண்டலத்திலிருந்து 15 குடும்பங்களுக்கு எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனை திருவிழாவாகக் கொண்டாடியுள்ளனர் உள்ளூர் மக்கள். 

இந்த ஊர்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியிருப்பதாக அமைச்சர் கம்லங் மோசாங் தெரிவித்துள்ளார். இதுநாள் வரை அவர்கள் விறகுகளை வைத்து அடுப்பில்தான் சமைத்து வந்தனர். இதனால், மழைக்காலங்களில் பெண்கள் படும் துயரத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது. இதனால், மக்களின் கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி மக்கள் பலருக்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எரிவாயு உருளைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களது ஆவணங்கள் உரிய அதிகாரிகளைச் சென்றடையவே பல நாள்கள் ஆகும். ஒரு வங்கிப் பணப்பரிமாற்றத்துக்குக் கூட இங்கு பல நாள்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது என்கிறார் கேஸ் ஏஜென்ஸி நிர்வாகி அந்து.

2020ஆம் ஆண்டு இக்கிராமத்துக்கு பிஎஸ்என்எல் வசதி வந்தாலும், ஒருவர் தொலைபேசியில் அழைக்கவோ, அழைப்பை எடுக்கவோ நிச்சயம் அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT