இந்தியா

மரத்தின் உச்சியில் 90 நிமிடங்கள்: யானைகளிடமிருந்து தப்பித்த கேரள இளைஞர்! 

27th Sep 2022 11:38 AM

ADVERTISEMENT

 

கேரளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காட்டு யானைகளின் நடுவே சிக்கியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுற்றுலாத் தலமான மூணாறு அருகே தனது நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த சஜி என்ற இளைஞர், திடீரென காட்டு யானைகளின் கூட்டம் நடுவே சிக்கிக்கொண்டார். 

பல யானைகள் கூட்டம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட சஜி, அந்த யானைகளிடமிருந்து தப்பிக்க ஓட முயன்றார். ஒருகட்டத்தில் அவரால் ஓட இயலவில்லை, அங்கிருந்த உயரமான யூகலிப்டஸ் மரத்தில் ஏற முயற்சித்தான். சில நிமிடங்களில், மேலே ஏறி உச்சியை அடைந்தார். 

ADVERTISEMENT

யானைகள் அவரை விடாமல், அவர் ஏறிய மரத்தைச் சுற்றி வளைத்தன. நேரம் கடந்துவிட்டதை உணர்ந்த சஜி, தன்னை காப்பாற்றும் படி கதற ஆரம்பித்தான். 

சற்று நேரத்தில் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு காட்டு யானைகளை ஊர் மக்கள் விரட்டி அடித்தனர். யானைகள் கூட்டம் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, சஜி, உள்ளூர் மக்களுக்கு நன்றி கூறி கீழே இறங்கினார். 

இதனிடையே, சின்னக்கானல் பகுதியில் உள்ள அப்பகுதி மக்கள், காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT