இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 6 மாதக் குழந்தை கடத்தல்

27th Sep 2022 07:26 PM

ADVERTISEMENT

 

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்கிழமை) ஆறு மாத குழந்தை கடத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து, பர்தா அணிந்த பெண், குழந்தையை எடுத்துச் செல்வது போல சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரைப் பிடிக்கவும் குழந்தையை மீட்கவும் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது என்றார்.

இந்நிலையில் குழந்தையை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT