இந்தியா

அசாமில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கைது!

27th Sep 2022 01:48 PM

ADVERTISEMENT

 

அசாமின்  8 மாவட்டங்களில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 25 பேரை அசாம் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

நாடு முழுவதும் பிஃஎப்ஐ தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 106 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இன்று உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், அசாம், தில்லி, மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய 7 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் மாநில காவல் துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

படிக்க: இவருடைய படத்துக்கு 28 லட்சம் லைக்ஸ்களா?

இதில், அசாமில் கோல்பராவில் 10 பேர், கம்ரூப்பில் 5 பேர், துப்ரியில் 3 பேர், பார்பெட்டா மற்றும் பக்சா மாவட்டங்களில் தலா இருவர், கரும்கஞ்ச், உடல்குரி, தரங் மாவட்டங்களில் தலா ஒருவர் கைது செய்யப்பட்டனர். 

முன்னதாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 11 பிஎப்ஐ உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அசாமி கைது செய்யப்பட்டனர். இதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாநிலத் தலைவர் மினாருல் ஷேக்-கும் ஒருவர். நீதிமன்ற உத்தரவின் பேரில் 11 பேரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநிலத்தில் பிஎப்ஐ உறுப்பினர்களுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறை தொடரும் என்று கூறினார். 

Tags : PFI Assam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT