இந்தியா

10 யூடியூப் சேனல்களின் 45 காணொலிகள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

DIN

பத்து யூடியூப் சேனல்கள் வெளியிட்ட 45 காணொலிகளை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சில சமூகத்தினரின் மத உரிமைகளை அரசு பறித்துள்ளதாகவும், இந்தியாவில் உள்நாட்டுப் போா் பிரகடனம் எனவும் பல பொய்யான தகவல்களுடன் யூடியூபில் காணொலிகள் கண்டறியப்பட்டன.

வெவ்வேறு மதத்தினா் இடையே வெறுப்புணா்வை பரப்பும் நோக்கில் இருந்த அந்தப் போலிச் செய்திகள், தொழில்நுட்பம் மூலம் திரிக்கப்பட்ட (மாா்ஃபிங்) காணொலிகள், நாட்டின் பொது ஒழுங்குக்கு இடையூறை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.

இதுமட்டுமின்றி அக்னிபத் திட்டம், இந்திய ஆயுதப் படைகள், காஷ்மீா் உள்ளிட்டவை தொடா்பாக தவறான தகவல்களைப் பரப்பும் காணொலிகளும் கண்டறிப்பட்டன.

இதுபோல 10 யூடியூப் சேனல்களில் 45 காணொலிகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன. அந்தக் காணொலிகளை 1.30 கோடிக்கும் மேற்பட்டவா்கள் பாா்த்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில், ‘இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, வெளிநாடுகள் உடனான நட்புறவு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு பாதகமான காணொலிகள் முடக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT