இந்தியா

2023-ல் இந்தியாவில் 10.4% ஊதியம் உயர வாய்ப்பு!

DIN

பெங்களூரு: மந்தநிலை மற்றும் உள்நாட்டு பணவீக்கம் இருந்தபோதிலும், இந்தியாவில் சம்பளம் 2023 இல் 10.4 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

இது 2022 இல் இது 10.6 சதவீதம் க இருந்தது, இது பிப்ரவரியில் கணிக்கப்பட்ட 9.9 சதவீத அதிகரிப்பை விட சற்று கூடுதல்.

இ-வணிகத் துறையானது 2023 ஆம் ஆண்டில் 12.8 சதவீத ஊதிய உயர்வுடன் முன்னணியில் இருக்கும், அதைத் தொடர்ந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 12.7% என்ற அளவில் இருக்கும் என்று திங்கள்கிழமை வெளியான ஆன் இந்தியாவின் 28-வது ஆண்டு வருமான உயர்வு குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தாண்டி, ஹை-டெக், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப-செயலாக்கும் சேவை ஆகியவற்றிலும் 11.3 சதவீதமும் நிதி மையங்களில் 10.7 சதவீதமும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 20.3 சதவீதமாக உயர்ந்த நிலையில், 2021 இல் பதிவுசெய்யப்பட்ட 21 சதவீதத்தை விட சற்றே குறைவாக இருந்ததால்ல், சம்பளத்தின் மீதான அழுத்தம் நீடிக்கும் என்றே கருதப்படுகிறது. அதே வேளையில், அனைத்துத் துறைகளிலும் சம்பளம் அதிகரிக்கும் என்ற நல்ல தகவலையும் கணக்கெடுப்பு பதிவு செய்துள்ளது.

40 க்கும் மேற்பட்ட தொழில்துறைகளில் இருக்கும் 1,300 நிறுவனங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு கூறுவது என்னவென்றால், இந்தப் போக்கு அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதே.

எவ்வாறாயினும், நிறுவனத் தலைவர்கள் தங்கள் பணியாளர்கள் இன்றும், எதிர்காலத்திலும் நிறுவனத்துக்கு நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் மொத்த பயன்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் உயரும் செலவுகள் மற்றும் சம்பளம் மீதான அழுத்தங்களின் தாக்கத்தை ஒப்பிட்டு, அதிக திறமைக்கான தற்போதைய தேவையுடன் சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

SCROLL FOR NEXT