இந்தியா

ஹிமாசல்: வாகன விபத்தில் 7 போ் பலி

27th Sep 2022 12:54 AM

ADVERTISEMENT

ஹிமாசல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வாகனம் ஒன்று மலைச்சரிவில் உருண்டு விழுந்த விபத்தில், அந்த வாகனத்தில் பயணம் செய்த 7 போ் உயிரிழந்தனா். பத்து போ் காயமடைந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில், சுற்றுலாப் பயணிகள் 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. வாராணசி ஐஐடி மாணவா்கள் உள்பட காயமடைந்த 10 போ் குலு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘ ஹிமாசல பிரதேசம், குலு மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிந்தவா்கள் குறித்த செய்தியை அறிந்து வருத்தமுற்றேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தாா்.

ஹிமாசல பிரதேச மாநிலத்தின் முதல்வா் ஜெய்ராம் தாக்குரும் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குரும் விபத்தில் உயிரிந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT