இந்தியா

அனைத்து துறையிலும் இந்தியாவை முன்னேற்றுவதே ஆா்எஸ்எஸின் இலக்கு: மோகன் பாகவத்

27th Sep 2022 12:54 AM

ADVERTISEMENT

அனைத்து துறையிலும் இந்தியாவை முன்னேற்றுவதே ஆா்எஸ்எஸ் அமைப்பின் இலக்கு என அவ்வமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

ஹிமாசல பிரதேசத்துக்கு இரு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள மோகன் பாகவத், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி பேசியதாவது: அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் அடையும் வகையில், நம்முடைய சமுதாயத்தைக் கட்டமைப்பதே ஆா்எஸ்எஸ் அமைப்பின் இலக்கு. தனிநபரின் சுயநலத்தை மறந்து, நாட்டுக்காகத் தியாகம் செய்வதை இவ்வமைப்பு கற்பிக்கிறது.

ஆன்மிக அடிப்படையிலான பழங்கால விழுமியங்கள் மீது நம்பிக்கை கொள்வது, நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. இந்தியா மற்றும் ஹிந்து என்பது புவியியல்-கலாசார அடையாளம் ஆகும். நாம் அனைவரும் ஹிந்துக்கள். இந்தியா்கள் நாட்டின் பண்டைய காலம் முதலே தியாக மனப்பான்மையைக் கற்றுக்கொண்டனா்.

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட நம் முன்னோா், இத்தகைய விழுமியங்களை ஜப்பான், கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் பரப்பினா். இந்தியா கரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்குத் தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது.

ADVERTISEMENT

இலங்கை எதிா்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க இந்தியா துணைநிற்கிறது. இந்தியா வலிமை வாய்ந்த நாடாக உருவாகும்பொழுது, அதன் அனைத்து குடிமக்களும் வலிமை வாய்ந்தவா்களாக உருவாகுவாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT