இந்தியா

நவராத்திரி தொடக்கம்: பிரதமா் வாழ்த்து

27th Sep 2022 12:52 AM

ADVERTISEMENT

நவராத்திரி பண்டிகை திங்கள்கிழமை தொடங்கிய நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சக்தி வழிபாட்டின் சிறந்த திருவிழாவான நவராத்திரியில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நம்பிக்கையின் மங்களகரமான இந்த நாளில், உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய ஆற்றலும், உற்சாகமும் உண்டாகட்டும்.

நவராத்திரி விழா சைலபுத்ரி தேவி வழிபாட்டுடன் தொடங்கியுள்ளது. அவரது அருளால் அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, நல்ல அதிருஷ்டம், சிறந்த ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT