இந்தியா

குஜராத்தில் மேம்பாலத்தைத் திறந்துவைத்தார் அமித்ஷா! 

26th Sep 2022 12:44 PM

ADVERTISEMENT

 

குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அருகே மேம்பாலம் மற்றும் ஆரம்பச் சுகாதார மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திறந்துவைத்தார். 

இரண்டுநாள் பயணமாக குஜராத் வந்துள்ளது ஷா, அகமதாபாத் மாவட்டத்தில் விவசாயிகள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

அந்தவகையில், ஷா தனது காந்திநகர் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் நகரின் புறநகரில் உள்ள எஸ்பி ரிங் சாலையில் உள்ள பதாஜ் கிராமத்திற்கு அருகே ஒரு மேம்பாலத்தைத் திறந்துவைத்தார். 

ADVERTISEMENT

ரிங் சாலையின் பரபரப்பான பதாஜ் வட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரூ.73 கோடி செலவில், அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் ஆறு வழி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது என்று குஜராத் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படிக்க: நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்!

பின்னர், ஷா தனது நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சனந்த் தாலுகாவின் விரோச்சன்நகர் கிராமத்தில் ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் திறந்து வைத்தார். 

மேலும், அட்டவணையின்படி அகமதாபாத் மாவட்டத்தின் சனந்தில் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்ட உள்ளார். 

இன்று பிற்பகல் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா கிராமத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டிலும் அவர் கலந்துகொள்கிறார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT