இந்தியா

லக்னௌவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி!

26th Sep 2022 04:11 PM

ADVERTISEMENT

 

லக்னௌவில் டிராக்டர் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். 

நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு செய்வதற்காக, பயணிகள் அனைவரும் பக்ஷி கா தலாப் பகுதியில் உள்ள சந்திரிகா தேவி கோயிலுக்குச்  சென்றுகொண்டிருந்த போது  டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்ததாகவும், மேலும் குளத்தில் மூழ்கியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. 

ADVERTISEMENT

டிராக்டரில் மொத்தம் 46 பேர் இருந்ததாகவும், விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த 12 பேர் இட்டாஞ்சாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சந்திரிகா தேவியைத் தரிசிக்க மோகனாவில் இருந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், பல பயணிகள் டிராலிக்கு அடியில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags : Lucknow
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT