இந்தியா

துர்கா பூஜை: ரயில் பயணிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்

26th Sep 2022 04:10 PM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டின் கிழக்கு மண்டலங்களுக்கு ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு இருக்கும் பயணிகளுக்கு துர்கா பூஜை சிறப்பாக, பெங்காலி உணவுகளை வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

ஹௌரா, சீல்தா, அசான்சோல் உள்ளிட்ட ரயில் நிலையங்களைக் கடந்து செல்லும் சுமார் 70 ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த நல்வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்

இந்த வாய்ப்பின்படி, பயணிகள் 1323 என்ற எண்ணில் அழைத்து, தங்களது உணவை ஆர்டர் செய்துவிட்டால் போதும், அவர்கள் இருக்கும் ரயில் பெட்டி இருக்கைக்கே உணவு வந்து சேரும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு நவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்ல, பெங்காலி உணவுகளான ஆட்டுக்கறி சாப்பாடு, கோழிக்கறி மற்றும் மீன் சாப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சாப்பாட்டுப் பிரியர்களுக்காக மேற்கு வங்கத்தின் பிரபலமான கொல்கத்தா பிரியாணி, மீன் கறி, ரசகுல்லா உள்ளிட்டவைகளும் இந்த மெனு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT