இந்தியா

புதிய கட்சி: இன்று அறிவிக்கிறாரா குலாம் நபி ஆசாத்? 

26th Sep 2022 08:25 AM

ADVERTISEMENT

குலாம் நபி ஆசாத், இன்று புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆசாத் (73), கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்து, கட்சியிலிருந்து கடந்த மாதம் 26-ஆம் தேதி விலகினாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு-காஷ்மீரில் மூத்த நிா்வாகிகள் பலா் காங்கிரஸிலிருந்து வெளியேறினா்.

இதனிடையே, தான் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும், புதிய கட்சியை தொடங்கவிருப்பதாகவும் ஆசாத் கூறியிருந்தாா். 

இன்னும் பெயரிடப்படாத தனது புதிய கட்சிக்கான கொள்கைகளை இம்மாதத் தொடக்கத்தில் அவா் அறிவித்தாா். ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்பது, உள்ளூா் மக்களுக்கான வேலைவாய்ப்பு உரிமையை உறுதி செய்வது, காஷ்மீா் பண்டிட்களின் மறுகுடியமா்த்துதல் உள்ளிட்டவற்றை கொள்கைகளாக கொண்டு, தனது கட்சி செயல்படுமென அவா் அப்போது தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க- தென்னாப்பிரிக்காவில் மீண்டும் ‘பாரதியாா் விருதுகள்’

இந்த நிலையில் குலாம் நபி ஆசாத், இன்று புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது புதிய கட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கப்போவதாக அவர் பதிலளித்தார். இந்த சந்திப்பின்போது புதிய அரசியில் கட்சி குறித்த அறிவிப்பை குலாம் நபி ஆசாத் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT