இந்தியா

தில்லியில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

26th Sep 2022 01:10 PM

ADVERTISEMENT

தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் 129 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

தில்லியில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 75 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட சூழலில் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி வரையிலான காலத்தில் இதுவரை 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 129 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

ஒட்டுமொத்தமாக தில்லியில் இதுவரை 525 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தில்லியில் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், போஸீஸ் அகாதெமி, மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் டெங்கு தடுப்பு நடவடிக்கையின்போது கொசுப் பெருக்கம் இருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது.

இதையும் படிக்க | 'காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கட்டும்' - சச்சின் பைலட்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT