இந்தியா

சோனியா காந்தி இல்லத்தில் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்!

26th Sep 2022 08:22 PM

ADVERTISEMENT

 

தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகை புரிந்துள்ளார். 

ஏற்கெனவே அஜய் மேகன், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், கமல்நாத் உள்ளிட்ட பலர் சோனியா காந்தி இல்லத்தில் குவிந்துள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் துணை முதல்வரான சச்சின் பைலட் முதல்வர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

படிக்ககாங்கிரஸ் தலைவராக விருப்பமில்லை: கமல்நாத்

இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சச்சின் பைலட் முதல்வரானால் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வோம் என ராஜஸ்தானின் 92 எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தலைமைப் பொறுப்பு மற்றும் ராஜஸ்தான் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்தில் குவிந்துள்ளனர்.     

படிக்கராஜஸ்தான் அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

அந்தவகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சோனியா காந்தி இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT