இந்தியா

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் ஒருவர் கைது

26th Sep 2022 09:34 PM

ADVERTISEMENT

 

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடையதாக ஏற்கெனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக பேசிய கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தற்போது சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பிஎஃப்ஐ துடியலூர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும் இவருடன் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்று புலன் விசாரணை மேற்கொள்ளப்படும். தலைமறைவாக உள்ளவர்களை காவல் துறை தேடி வருகிறது எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT