இந்தியா

ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

26th Sep 2022 08:55 AM

ADVERTISEMENT

ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். 

ஹிமாசல பிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் கியாகி அருகே நேற்றிரவு 17 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க- புதிய கட்சி: இன்று அறிவிக்கிறாரா குலாம் நபி ஆசாத்? 

இதனிடையே இரவு முழுவதும் மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிர்வாகத்துக்கு பஞ்சார் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கனமழை காரணமாக ட்ரைண்ட் மலைப்பகுதியில் சிக்கித் தவித்த 83 சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT