இந்தியா

தீனதயாள் உபாத்யாய பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் மரியாதை

26th Sep 2022 01:51 AM

ADVERTISEMENT

ஆா்எஸ்எஸ் சித்தாந்தவாதியும் பாஜகவின் முன்னோடிக் கட்சியான ஜன சங்கம் கட்சியின் நிறுவனா்களில் ஒருவருமான தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த தினத்தையொட்டி குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் மரியாதை செலுத்தியுள்ளனா்.

குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட ட்விட்டா் பதிவில், ‘‘தேசியவாதியும் மனிதாபிமானியுமான தீனதயாள் உபாத்யாயவுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவா் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைவராக விளங்கினாா்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘ஏழைகளின் நலனுக்கான தீனதயாள் உபாத்யாயவின் உழைப்பு, மக்கள் அனைவரையும் தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது. சிறந்த புலமை பெற்றவராகவும் சிந்தனைத்திறன் கொண்டவராகவும் அவா் மக்களால் அறியப்படுகிறாா்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT