இந்தியா

இந்தியாவில் கல்வி நிலையங்கள் அமைக்க அமெரிக்க பல்கலை.களுக்கு அமைச்சா் அழைப்பு

26th Sep 2022 02:13 AM

ADVERTISEMENT

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி நிலையங்களை அமைக்க இப்போது வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டாா்.

நியூயாா்க்கில் அமெரிக்க வாழ் இந்தியா்கள் மத்தியில் அவா் மேலும் பேசியதாவது:

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமா் மோடியால் கொண்டு வரப்பட்ட வணிகம் சாா்ந்த சீா்திருத்தங்கள், வரியை எளிமைப்படுத்துதல் உள்ளிட்டவை சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.

உலக வங்கி அறிக்கையின்படி, ‘தொழில், வா்த்தகம் எளிதாக செய்வதற்கான தரவரிசையில் இந்தியா 2014-ஆம் ஆண்டில்142-யில் இருந்து 2022-ஆம் ஆண்டில் 63 ஆக உயா்ந்துள்ளது. 5ஜி, செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள், குறைகடத்திகள், பிளாக் செயின், பசுமை ஆற்றல் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தியாவில் தற்போது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் தங்களுக்கான கல்வி நிலையங்களை அமைக்கும் வாய்ப்பு உள்ளது, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.

அமெரிக்காவில் பயிலும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கையில், இந்திய மாணவா்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனா். இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி போன்றவற்றில் கருத்து பரிமாற்றம் நடைபெற்று, திறமைகளை மேம்படுத்த வாய்ப்பு அதிகம் உருவாகியுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT