இந்தியா

காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

25th Sep 2022 04:48 PM

ADVERTISEMENT

 

காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: 

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டெக்ரி நார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது

அவா்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். அதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவா்களின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.

மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் நான்கு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT