இந்தியா

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக நாளை கர்நாடகம் வருகை!

25th Sep 2022 04:23 PM

ADVERTISEMENT


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள்கள் பயணமாக நாளை திங்கள்கிழமை(செப்.26) கர்நாடகம் வருகிறார். குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பின்னர் முதல் மாநில பயணமாக கர்நாடகம் வருகிறார். 

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா திங்கள்கிழமை (செப். 26) கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. விழா அக். 5-ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. 

கர்நாடகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாளை மைசூர் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் 10.05 மணிக்குள் நடைபெறும் சிறப்பு பூஜையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று மைசூர் தசரா-2022 விழாவைத் தொடங்கி வைக்கிறார். பின்னர், தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார். 

இதையும் படிக்க | பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்கத் திட்டம்: ராமதாஸ் கண்டனம்

ADVERTISEMENT

நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை(செப்.27) பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியையும் திரௌபதி மும்மு தொடங்கி வைக்கிறார். 

மைசூரு தசரா விழாவைக் காண இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் மைசூருக்கு வருகை தருவதால் உலகப் புகழ்பெற்றது.

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்றால் எளிமையாகக் கொண்டாடப்பட்ட உலகப் புகழ்பெற்ற தசரா விழா, மைசூரில் திங்கள்கிழமை கோலாகலமாகத் தொடங்கப்படவுள்ளது. தசரா திருவிழா நடைபெறும் 10 நாள்களும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மைசூருக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால் மைசூரு நகரெங்கும் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT