இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி

25th Sep 2022 05:04 PM

ADVERTISEMENT

உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குறைந்தபட்ச செயற்கை சுவாசம் மூலம் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிக்க- 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா, 1999 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். 

ADVERTISEMENT

மேலும் மகாராஷ்டிர ஆளுநராகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். எஸ்.எம்.கிருஷ்ணா 2017 ஜனவரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT