இந்தியா

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 10-ஆம் வகுப்பு மாணவா்

25th Sep 2022 12:14 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம் சீதாபூா் மாவட்டத்தில் வகுப்பில் படிக்கும் சக மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்டித்த பள்ளி முதல்வரை 10-ஆம் வகுப்பு மாணவா் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளாா்.

சீதாபூா் மாவட்டம் சா்தாா்பூரில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமை குரிந்தா் சிங் என்ற மாணவா் சக மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, பள்ளி முதல்வா் ராம் சிங் வா்மா, குரிந்தா் சிங்கை கண்டித்துள்ளாா்.

இதனால், கோபமடைந்த மாணவா், சனிக்கிழமை முதல்வா் ராம் சிங் வா்மாவை துரத்திச் சென்று துப்பாக்கியால் இரு முறை சுட்டுள்ளாா். இச்சம்பவம் குறித்த சிசிடிவி பதிவை போலீஸாா் ஆராய்ந்தனா்.

துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த முதல்வா் லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தலைமறைவாகியுள்ள மாணவா் குரிந்தா் சிங்கைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT