இந்தியா

தாய்லாந்தில் ஐ.டி. வேலை: மத்திய அரசு எச்சரிக்கை

24th Sep 2022 05:36 PM

ADVERTISEMENT


புது தில்லி; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் கொண்டவர்களை குறிவைத்து, தாய்லாந்தில் ஐ.டி. வேலை என்று கூறி ஏமாற்றும் மோசடி பேர்வழிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய வெளிவிவகாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

தாய்லாந்தில் வேலை என்று விளம்பரப்படுத்தி, தாய்லாந்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மியான்மருக்கு மக்களை கடத்திச் சென்று மிக மோசமான வேலைகளில் ஈடுபடுத்தும் கும்பல் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதையும் படிக்க வாழ்க்கைத் துணை உங்களை அதிகம் நேசிப்பதற்கு இதுதான் அறிகுறி

எனவே, இதுபோன்ற வேலை மோசடி நபர்களிடம் இந்தியர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுபோன்று ஐ.டி. வேலை என்றுச் சொல்லி வேலைக்கு ஆட்களை எடுத்துவிட்டு, பிறகு, போலியான கால் சென்டர்களை நடத்துவது போன்ற சட்டத்துக்கு விரோதமான வேலைகளில் ஈடுபடுத்தும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுபோன்ற மோசடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தற்போது மியான்மரில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT