இந்தியா

சீதாபூரில் கல்லூரி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12ஆம் வகுப்பு மாணவன் 

24th Sep 2022 06:05 PM

ADVERTISEMENT

சீதாபூரில் 12ஆம் வகுப்பு மாணவன் கல்லூரி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூரின் ஜஹாங்கிராபாத் நகரில் உள்ள ஆதர்ஷ் ராம் ஸ்வரூப் இன்டர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 12ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு இடையே நேற்று இருக்கை தொடர்பான விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கல்லூரி முதல்வர் ராம் சிங் வர்மா இரு மாணவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வின்போது மாணவன் குர்விந்தர் சிங்கை கல்லூரி முதல்வர் திட்டியதாக தெரிகிறது. இதனால் கல்லூரி முதல்வர் மீது மாணவன் குர்விந்தர் சிங் கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த முதல்வர் ராம் சிங் வர்மாவை கண்ட மாணவன் குர்விந்தர் தான் பையில் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முதல்வரை நோக்கி 3 ரவுண்டுகள் சுட்டுள்ளான்.

இதையும் படிக்க- தாய்லாந்தில் ஐ.டி. வேலை: மத்திய அரசு எச்சரிக்கை

ADVERTISEMENT

இதில் முதல்வரின் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த கல்லூரி முதல்வரை மீட்டு சீதாபூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மாணவனை தேடி வருகின்றனர்.

சீதாபூரில் 12ஆம் வகுப்பு மாணவன் கல்லூரி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT