இந்தியா

ஏடிஎம் இயந்திரத்தோடு கொள்ளையடித்த மர்ம கும்பல்: ரூ.12 லட்சம் பணம் திருட்டு!

22nd Sep 2022 03:53 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானில் சவாய் மாதோபூரில் அடையாளம் தெரியாத மர்ம கும்பம் ஏடிஎம் இயந்திரத்தோடு, ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கியில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்த காலம் மறைந்து, தெருவிற்கு தெரு உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் மக்கள் பணத்தை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனை சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. 

பெரும்பாலான இடங்களில் ஏடிஎம்  இயந்திரத்தை உடைத்து பணம் திருடும் கும்பலைக் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் இங்கு ஏடிஎம் இயந்திரத்தையே அலேக்காக திருடிச் சென்றுள்ளது ஒரு கும்பல். 

ADVERTISEMENT

படிக்க: அஜித்தின் ‘துணிவு’: இரண்டாவது போஸ்டர் வெளியீடு

ராஜஸ்தானின் சர்சான்ப் கிராமத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் அறை உடைக்கப்பட்டு அங்கிருந்து இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். புதன்கிழமை இரவு இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12.10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. வங்கி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags : ATM Robbers
ADVERTISEMENT
ADVERTISEMENT