இந்தியா

அசைவற்றுப் பிறந்த குழந்தை.. மருத்துவரின் 7 நிமிடப் போராட்டம்: இறுதியில் ஒரு டிவிஸ்ட்

22nd Sep 2022 04:53 PM

ADVERTISEMENT


ஆக்ராவில், பிறக்கும் போதே அசைவற்றுப் பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தி 7 நிமிடங்கள் குழந்தைகள் நல மருத்துவர் அளித்த உயிர்ப் போராட்டத்தின் காரணமாக, குழந்தை கண் விழித்துப் பார்த்தது.

ஆக்ராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது அசைவற்று இருந்ததை கவனித்தனர்.

இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..

உடனடியாக குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. ஆனாலும் அது பலனளிக்கவில்லை. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவர் சுலேகா சௌத்ரி, குழந்தையைக் கையில் ஏந்தி உயிர்ப் போராட்டத்தைத் தொடங்கினார்.

ADVERTISEMENT

 

குழந்தையின் வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றை உள்ளே செலுத்தினார். பிறகு குப்புற போட்டு முதுகை நன்கு தட்டினார். நின்று போன இதயத்தைத் துடிக்க வைக்க அவர் மீண்டும் மீண்டும் இதனைச் செய்தார். சுமார் 7 நிமிடங்கள் மருத்துவர் சலிக்காமல் மனதை தளரவிடாமல் இதனைச் செய்து கொண்டே இருந்தார். ஆம் அந்த அற்புதம் நடந்தது அப்போதுதான்.

இதையும் படிக்க வாழ்க்கைத் துணை உங்களை அதிகம் நேசிப்பதற்கு இதுதான் அறிகுறி

குப்புற போட்டு முதுகைத் தட்டியபோது, நின்று போன இதயம் துடித்தது. குழந்தை கண்விழித்து அந்தக் கடவுளை பார்த்தது. குழந்தை கண்விழித்துப் பார்த்தபோது மருத்துவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நிச்சயம் இந்த விடியோவை பார்க்கும் போது அனைவருக்குமே அந்த எண்ணம்தான் தோன்றும். 

அது மட்டுமல்ல, அந்தக் குழந்தை தனது கையைத் தூக்கி மருத்துவரைத் தொடுவதுபோல வருவதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT