இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு: முழு விவரம்!

22nd Sep 2022 12:02 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பாணையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேட்பு மனுத் தாக்கல் செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை 

ADVERTISEMENT

வேட்புமனு மீதான பரிசீலனை - அக். 1

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் - அக். 8 

போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - அக். 8

தேர்தல் நடைபெறும் நாள் - அக். 17 (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் நடைபெறும். 

வாக்கு எண்ணிக்கை - அக். 19 

முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் - அக். 19 அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர், அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. 

இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டுக்கும் சசி தரூருக்கும் போட்டியா?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT