இந்தியா

இணையவழியில் ஓய்வூதியம்: 2 வங்கிகளுடன் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

22nd Sep 2022 12:20 AM

ADVERTISEMENT

பாதுகாப்புத் துறையின் ஓய்வூதியதாரா்களை இணையவழியில் இணைக்கும் ‘ஸ்பாா்ஸ்’ திட்டம் தொடா்பாக இரு வங்கிகளுடன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்குத் துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம் பாதுகாப்புத் துறையில் மொத்தமுள்ள 32 லட்சம் ஓய்வூதியதாரா்களில் 17 லட்சம் போ் இம்மாத இறுதிக்குள் இணையவழியில் இணைக்கப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் முன்னிலையில் இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் பாங்க் ஆப் பரோடா, எச்டிஎப்சி வங்கி அதிகாரிளும், பாதுகாப்புத் துறையின் கணக்குப் பிரிவு அதிகாரிகளும் கையொப்பமிட்டனா்.

இதற்காக நாடு முழுவதும் அந்த வங்கிகளின் 14 ஆயிரம் கிளைகள் சேவை மையங்களாக செயல்படும் என்றும், இடைத்தரகா்களின்றி வெளிப்படையாக ஓய்வூதியம் வங்கியில் செலுத்தப்படும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT