இந்தியா

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்!

21st Sep 2022 11:53 AM

ADVERTISEMENT

 

பிரபல இந்தி நகைச்சுவை நடிகரும், நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி தில்லி மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவருக்கு வயது 58. ஆகஸ்ட் 10-ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். 

பின்னர், சேர்க்கை சுவாசம் பொருத்தப்பட்ட அவர், சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து 40 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். 

ADVERTISEMENT

படிக்க: இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து

இந்நிலையில், ராஜு ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.20 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

1980-களில் தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்(2005) என்ற ரியாலிட்டி ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று இணையற்ற வெற்றி பெற்றார். 

ராஜு ஸ்ரீவஸ்தவா இந்தி படங்களான மேனே பியார் கியா, பாஸிகர், பாம்பே டு கோவா மற்றும் ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா போன்றவற்றின் ரீமேக்காகவும் நடித்துள்ளார்.

உத்தரப் பிரதேச திரைப்பட மேம்பாட்டு குழுவின் தலைவராக இருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT